ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம்பெண் சுட்டுக்கொலை

by Staff / 26-09-2022 03:35:27pm
ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம்பெண் சுட்டுக்கொலை

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். ஆனால் இதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த சில நாட்களுக்குமுன்பு சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி மாஷா அமினி என்ற 22 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.போலீசார் விசாரணையின் போது அவர் திடீரென இறந்தாக தெரிவித்தனர்.இந்த நிலையில் ஈரானின் கராஜ் நகரில் போராட்டத்தில் பங்கேற்ற ஹதிஷ் நஜிபி என்ற 20 வயது இளம்பெண் பாதுகாப்பு படை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். போலீசார் துப்பக்கியால் சுட்டத்தில் அவரது முகம், நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்து விட்டார். இதனால் ஈரானில் மேலும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
 

 

Tags :

Share via