யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன்

by Staff / 27-09-2022 01:46:40pm
யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன்

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரபல யூடியூபரான டி.டி.எஃப்.வாசன், கிட்டத்தட்ட 152 கிலோமீட்டர் வேகத்தில் தான் பைக் ஓட்டுவதையும், இவருக்கு பின்னால் அமர்ந்துள்ள மற்றொரு யூடியூபரான ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் பயத்தில் அலறுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அதிவேகமாக வாகனத்தை இயக்கியதற்காக கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று யூடியூபர் டி.டி.எஃப் வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இரண்டு நபர்கள் உத்தரவாதம் கொடுத்ததனை அடுத்து மாலை அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

 

Tags :

Share via