அன்பில் மகேஷ் உடல்நிலை.. புதிய தகவல்

by Staff / 29-09-2022 01:01:59pm
அன்பில் மகேஷ் உடல்நிலை.. புதிய தகவல்

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை திடீரென அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர் எச்1என்1 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்பில் மகேஷ் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

 

Tags :

Share via