2167 பயனாளிகளுக்கு ரூபாய் 4கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.

by Staff / 29-09-2022 05:41:49pm
2167 பயனாளிகளுக்கு ரூபாய் 4கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் அகரம் முத்தாலம்மன் கோவில் வளாக மேடையில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையும் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு பேசுகையில், அகர பேரூராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலை, சிமெண்ட் சாலை , கழிவு நீர் வாய்க்கால் ஆகியவை 70 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 2755 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. ரூபாய் 3 லட்சம் வரை மகளிர் சுய உதவி குழு கடன் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட உள்ளது. மாடு ஆடு கோழி மீன் வளர்த்தல் ஆகிய தொழில்கணங்கள் மகளிர் குழுக்களுக்கும் வழங்கப்பட உள்ளது என பேசினார். ஆதிதிராவிடர் இ பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, உழவர் பாதுகாப்பு திட்டம் இறப்பு நிவாரண தொகை திருமண உதவித்தொகை புதிய மின்னணு குடும்ப அட்டை விவசாய இடுபொருள், நாற்றுகள், விதை மற்றும் உரம் வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால உதவி திட்டம் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் சுய உதவி குழு கடன் மாற்றுத்திறனாளிக்கான கடன் பயிர் கடன் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 2167 பயனாளி களுக்கு ரூபாய் 4கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார், பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உட்பட கலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via