9 மாதத்தில் 136 பேர் மீது குண்டர் சட்டம்

by Staff / 03-10-2022 04:26:26pm
 9 மாதத்தில் 136 பேர் மீது குண்டர் சட்டம்

சேலம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், கடத்தல் போன்ற குற்றங்கள் செய்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஓராண்டு ெஜயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வர முடியாது. சேலம் மாநகரில் கடந்த 9 மாதங்களில் இதுவரை 136 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதில் ெதாடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்ட ரவுடிகள் 75 பேர், கஞ்சா விற்ற 14 பேர், கொள்ளையர்கள் 39 பேர், லாட்டரி வியாபாரிகள் 5 பேர் உள்பட 136 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தடுப்புகாவல் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு மாவட்ட நீதிமன்றங்களில் ஜாமீன் கிடைக்காது. சரியான காரணங்கள் இல்லாமல் யார் மீதும் வழக்கு பாயாது. இதற்கான ஆவணங்களை தயார் செய்ய ஒரு வழக்குக்கு அரசுக்கு ரூ. 10 ஆயிரம் வரை செலவு செய்கிறது, என்றனர்

 

Tags :

Share via