திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்

by Editor / 25-07-2019 10:19:23am
திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், ஆவடி, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்

சென்னை:

     திருத்தணி முருகன் கோயில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வருடத்தின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில்..இக்கோயில் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.

சென்னையிலிருந்து 53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே திருத்தணி என்ற இடத்தில் அமைந்துள்ளது. திருத்தணி செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.இக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படும் என்பதால் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சென்ட்ரல், ஆவடி, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

Share via