மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 15 நாளிலிருந்து அதிகபட்சம் 30 நாள்களுக்குள்ளாக பணிகள் முழுமை பெற்று விடும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 08-10-2022 08:08:05pm
 மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 15 நாளிலிருந்து அதிகபட்சம் 30 நாள்களுக்குள்ளாக பணிகள் முழுமை பெற்று விடும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த ஆண்டுகளைப் போல் மழைவெள்ளப் பாதிப்பு இல்லாத நிலையை உறுதிசெய்ய மழைநீர் வடிகால் - தூர்வாரும் பணிகள் ஓயாமல் நடந்து வருகின்றன.நேற்று தென் சென்னையில் பணிகளைப்பார்வையிட்டு இன்று  வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுசெய்து, பணிகளை விரைந்தும், தரத்தில் குறைவின்றியும் முடிக்க உத்தரவிட்டுள்ளதோடு கொளத்தூர் பகுதியில் மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் 92 சாலைகளில் ரூ. 96.50 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக வேலவன் நகர் பகுதியில் பேப்பர் மில்ஸ் சாலைசந்திப்பில் 485 மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .இது குறித்து பேசிய முதலமைச்சர், சென்னை முழுதும் 60லிருந்து 70 விழுக்காடு பணிகள் முடிந்து விட்டதாகவும் குறைந்தபட்சம் 15 நாளிலிருந்து அதிகபட்சம் 30 நாள்களுக்குள்ளாக பணிகள் முழுமை பெற்று விடும் என்று தெரிவித்தார்.உடன்,அமைச்சர் கே.என்.நேரு,பி.கே.சேகர்பாபு,தயாநிதி மாறன் எம.பி,. மாநகராட்சி மேயர் ப்ரியா.ஆணையர் ககன்சிங் பேடி ஆகியோர்.. 

 

Tags :

Share via