காங்கிரஸ் கட்சியின் தலைவர் வேட்பாளர்கள் அறிவிப்பு- மதுசூதன மிஸ்திரி

by Admin / 08-10-2022 08:23:58pm
காங்கிரஸ் கட்சியின் தலைவர் வேட்பாளர்கள் அறிவிப்பு- மதுசூதன மிஸ்திரி


அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக சோனியாகாந்தி செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் கட்சியைப்பலப்படுத்த புதிய தலைவரை நியமிக்கவேண்டி கட்சியின் மூத்த தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர்.பலர்ராகுல் காந்தியை தலைவராகப்பதவி ஏற்க வலியுறுத்தினர்.ஆனால்,அவர் அந்த கோரிக்கையை மறுதளித்தார்.சில மூத்த தலைவர்கள் ராகுல்காந்திக்கு எதிராக கொடுத்தனர் .குலாம்நபி ஆசாத்,கபில் சிபில் போன்றவர்கள் லிலகினர்.இத்தகுச்சூழலில் தான் காங்கிரஸ்கட்சிக்கு தலைவராக யார் வேண்டுமானாலும்  விண்ணப்பிக்கலாம் என்கிறசெய்தி வெளியானது.அதற்கான வேலைளில் காங்கிரசு கட்சி இறங்கியது. சசிதரூர்,மல்லிகார்ஜின கார்க்கே இருவரும்வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இதற்கான வேட்பாளர் தேர்வினை நடத்தும் பொறுப்பில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின்பொதுச்செயலாளராக இருந்த மதுசூதன மிஸ்திரி நியமிக்கப்பட்டார்.அவர் தலைமையிலான பரிசீலனைக்கூழு ஆய்ந்துஇன்று  மல்லிகாா்ஜின கார்கே, சசிதரூர்  ஆகிய  இருவரும்  அதிகாரப்பூர்வ  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.இது குறித்து பேசிய ராகுல்காந்தி ,தலைவராக வருபவா்கள் எங்கள் குடும்பத்தின் கைப்பாவையாக இருக்கமாட்டாா்கள் என்றாா்.

 

Tags :

Share via