பாஜகவுடன் கூட்டணி இல்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்

by Staff / 24-09-2023 04:13:29pm
பாஜகவுடன் கூட்டணி இல்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்

பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது வரை கடந்த 18ஆம் தேதி எடுத்த முடிவில் நிலையாக இருக்கிறோம். சோதனைகளை எல்லாம் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் இல்லை. ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில், அதிமுகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
 

 

Tags :

Share via