அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

by Staff / 11-10-2022 12:58:41pm
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசில் பணிபுரியும் பிரிவு ' பி ' மற்றும் ' சி ' ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. புதுவை மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்மந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு 'பி'மற்றும் பிரிவு ' சி ' ஊழியர்கள் , முழுநேர தற்காலிக ஊழியர்கள் போனஸ் வழங்குவதற்கான கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .அதன்படி, ' பி ' மற்றும் ' சி ' ஊழியர்களுக்கு போனஸாக ரூ .6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ . 1,184 வழங்கப்படும் என நிதித்துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via