பிரபல நடிகர் காலமானார்

by Staff / 11-10-2022 01:04:06pm
பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் காரியவட்டம் சசிகுமார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இவர் ஏராளமான மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 1989-ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கிரைம் பிராஞ்ச் படம்தான் காரியவட்டம் சசிகுமார் நடித்த முதல் படம். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்ததால் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. நாகம், மிமிக்ஸ் பரேட், தேவசுரம், காம்பூலம், குஷ்ருத்தி கட்டு, ஆதாயத்தே கண்மணி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

 

Tags :

Share via