4 ஆம் தேதி தொடங்குகிறது அக்கினி நட்சத்திரம்.

by Editor / 02-05-2024 06:46:34pm
4 ஆம் தேதி தொடங்குகிறது அக்கினி நட்சத்திரம்.

"அக்னி நட்சத்திரம்"என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் துவங்கும்,தமிழ் மாத ராசிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை மறுதினம் 4 ஆம் தேதி  தொடங்குகிறது.இந்த கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது. பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும்.  கத்தரி வெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்க உள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதிலும் குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும், அதில் சில இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெயில் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்மாவட்டங்களிலும் இயல்பைவிட சற்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என அறிவித்து இருக்கிறது.இதுதவிர மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : 4 ஆம் தேதி தொடங்குகிறது அக்கினி நட்சத்திரம்.

Share via