தீபாவளி பண்டிகை சென்ற மக்கள் சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல்.

by Editor / 26-10-2022 09:05:43am
தீபாவளி பண்டிகை சென்ற மக்கள் சென்னை திரும்பியதால்  கடும் போக்குவரத்து நெரிசல்.

 தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சகணக்கான மக்கள் தென்மாவட்டங்களிலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் வசதிக்காவும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 25ஆம் தேதி விடுமுறை அளித்தது.

நேற்றுடன் விடுமுறை முடிந்ததையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும்,தனது சொந்த வாகனங்களிலும் வந்தவண்ணம் உள்ளனர்.இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து, தனியார் ஆம்னி பஸ்கள், கார், வேன்கள் என்று பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர்களுக்கு மக்களை அழைத்து சென்ற வாகனங்கள் இன்று அதிகாலை முதல் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், மதுரவாயல் கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தென்மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்துள்ளதால் ஆங்காங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.கால தாமதத்தோடு வாகனங்கள் சென்னைக்குள் நுழைந்துவருகின்றன.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கசாவடியில் வாகனங்கள் வரிசைக்கட்டி வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது.

தீபாவளி பண்டிகை சென்ற மக்கள் சென்னை திரும்பியதால்  கடும் போக்குவரத்து நெரிசல்.
 

Tags :

Share via