கடைகள் இனி 24 மணி நேரமும் திறந்திருக்கலாம்!

by Editor / 29-10-2022 08:16:33am
கடைகள் இனி 24 மணி நேரமும் திறந்திருக்கலாம்!

புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நடைமுறை தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : Shops may now be open 24 hours a day!

Share via