பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசிப்பெற்ற ராகவா லாரன்ஸ்

by Staff / 29-10-2022 02:57:10pm
பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசிப்பெற்ற ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் தனது 46 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளன்று ரஜினிகாந்தை சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் ராகவா லாரன்ஸ், "எனது பிறந்தநாளில் தலைவரிடம் ஆசிர்வாதம் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு வருடமும் நான் ஏதாவது சேவை செய்வேன். அந்தவகையில், இந்த ஆண்டு பசியின் மதிப்பை அறிந்த நான் அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். என்னால் முடிந்த இடங்களுக்கு தனிப்பட்ட முறையில் நேரில் சென்று உணவு விநியோகம் செய்வேன். எனக்கு உங்கள் ஆசிகள் வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via