சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரை :முக்கிய அம்சங்கள்!

by Editor / 21-06-2021 03:19:33pm
சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரை :முக்கிய அம்சங்கள்!

 

16வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதை அடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் உரையின் முக்கிய அம்சங்கள்!

* காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு உறுதி

* சென்னை மாநகராட்சி கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்

* மதுரையில் ரூபாய் 70 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் அமைக்கப்படும்

* சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் புதுப்பிக்கப்பட்டு புத்துயிர் ஊட்டப்படும்

* மேகதாது திட்டத்தை நிராகரித்து அரசு தொடர்ந்து வலியுறுத்தும்

* அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகளை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது

* தடையற்ற மின்சாரம் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது

* தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்ற சமூகநீதியை உறுதிசெய்துள்ளது

* தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். இதர பிற்பட்டோர் இட ஒதுக்கீடு பெறுவதற்கான கிருமிலேயரை முழுவதுமாக நீக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துவோம். இடைக்கால நிவாரணமாக கிரிமிலேயருக்கான வரம்பை 8 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது

* ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் மீண்டு வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது

* விரிவாக்கப்பட்ட சென்னை நகராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

* புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்

* ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் 3 குறைந்ததை அடுத்த தினசரி பால் விற்பனை சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது

* காரணம் இன்று நிறுத்தப்பட்ட சென்னை மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டம் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

* ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் மீண்டும் வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது

இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்தார்.

 

 

Tags :

Share via