பட்டினியில் மக்கள் மர்மத்தீவா..தேசமா ? என்ன நடக்குது வடகொரியாவில்..

by Editor / 21-06-2021 05:52:12pm
பட்டினியில் மக்கள் மர்மத்தீவா..தேசமா ? என்ன நடக்குது வடகொரியாவில்..

 

 வட கொரியாவில்என்ன நடக்கிறது என்று  தகவல் கிடைப்பது  கடினம் என்று கூறப்படுகிறது. .இந்த நிலையில் அங்கு உணவுப் பஞ்சம் ஏற்படவிருப்பதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.ஒரு வாழைப்பழம் 200 ரூபாய் என்கிறார்கள்  ஒரு கிலோ மக்காச் சோளத்தின் விலை 3,137 வான் ஆக அதிகரித்தது (இந்திய மதிப்பில் கிட்டதட்ட 200ரூபாய்). 
மக்காச் சோளம் அரிசியை காட்டிலும் குறைவாக உண்ணக்கூடிய உணவுப் பொருளாகும். இருப்பினும் அதன் விலை குறைவு என்பதால் அதிகம் உண்ணப்படுகிறது. தற்போது பியாங்யாங்கில் ஒரு கிலோ அரிசியின் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவு மிக அதிகமாக உள்ளது. 
 பெரும்பாலான வட கொரிய மக்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை சந்தையில்தான் பெறுகிறார்கள் அரசு அதிகாரிகளுக்கு குறைந்த அளவிலான உணவுப் பொருட்களே வழங்கப்படுகின்றன." அனைத்து வீடுகளுக்கும் அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் போதுமானதாக இல்லை. நீண்ட தூரம் சென்று பொருட்களை வாங்கும் நிலையும் உள்ளது. இதனால், பலர் கள்ளச் சந்தைகளில் பொருட்களை வாங்கும் நிலையும் உள்ளது.வடகொரியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை அதிகப்படியான மழை பெய்தது, 1981ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக மழை பெய்த காலம் அது. இந்த தகவலை வழங்குவது பாரிசில் உள்ள விவசாய கண்காணிப்பு அமைப்பான GEOGLAM.தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்திலிருந்து பஞ்சம் தீவிரமாகலாம். ஏனென்றால் அறுவடை சிறப்பாக இல்லாத காரணத்தால் கடந்த அறுவடையில் கிடைத்த அரசு கையிருப்பு குறையத் தொடங்கியுள்ளது.சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலமும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன.
அதற்கு பிறகு வந்த சூறாவளிகள் தாக்கத்தை மேலும் மோசமாக்கியது.1990ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது எரிபொருளுக்காக மரங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் அவ்வப்போது நடப்பட்டாலும், காடழிப்பு தொடர்ந்து கொண்டு இருந்தது. வெள்ளச் சூழல் மோசமாகியது.
கடந்த மார்ச் மாதம் சர்வதேச காடுகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு 68 ஆயிரம் ஏக்கர் மரங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 2 லட்சத்து 33 ஹெக்டேர் நிலப்பரப்பில் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.வட கொரிய விவசாய துறையில் அதிகம் அறியப்படாத பிரச்னையாக உரத் தட்டுப்பாடு உள்ளது.எளிதாக கிடைக்ககூடிய மாற்று உரங்களை கண்டறிய வேண்டும் என 2014ஆம் ஆண்டு விவசாயத் தலைவர்களுக்கு கிம் கடிதம் ஒன்றை எழுதினார்.
"விலங்குகளின் கழிவுகள், மனிதக் கழிவுகள், பூமிக்கு அடியில் இருக்கும் மண் என உரமாக மாறும் அனைத்தையும் பயன்படுத்துங்கள்," என கிம் குறிப்பிட்டார் இதில் இன்னும் ஒரு வேடிக்கை வீட்டுக்கு 2 லிட்டர் சிறுநீர் தர வேண்டுமாம். இது உர பற்றாக்குறையை நீக்கும் என அந்த நாட்டின் அதிகாரிகள் கூறி  உள்ளனர்.
வட கொரியா உர உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை. வட கொரியாவின் முக்கிய உரத் தொழிற்சாலையான கிக்கெய் ஆசியா (பிற பொருட்களுடன் உரத்தையும் தயாரிக்கிறது), மூலப்பொருட்கள் கிடைக்காமல் மூடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.
வட கொரியாவுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான ஏற்றுமதி நடைபெற்று கொண்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அது வெறும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தது என சீன  தகவல் தெரிவிக்கிறது.
 வர்த்தக நடவடிக்கைகளுக்கும் எல்லைகள் திறக்கப்படவில்லை எனத் தெரிவதாக கேந்திர, சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.2019 செப்டம்பரில் 100 வாகன போக்குவரத்து இருந்தது எனில் 2021 மார்ச்சில் அது 15ஆக குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அதே இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு சரக்கு ரயில்களின் போக்குவரத்து இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றதாகத் தெரிகிறது.இருப்பினும் எல்லைகள் எப்போது திறக்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எல்லைகள் மூடியிருப்பது வட கொரியாவுக்கு உணவு உதவிகள் சென்று சேருவதையும் சிக்கலாக்கியுள்ளது.
சீனாதான் வட கொரியாவுக்கு அதிகம் உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் அது பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து 80 சதவீத அளவு குறைந்துவிட்டது. கொடையளிக்கும் நாடுகளிடமிருந்து போதுமான உணவுகள் வட கொரியாவுக்கு செல்லவில்லை என ஐநா தெரிவிக்கிறது

 

Tags :

Share via