ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதி - அரவிந்த் கெஜ்ரிவால்

by Staff / 03-11-2022 04:01:08pm
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதி - அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சியின் வெற்றி உறுதி என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த நிலையில், கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குஜராத் மக்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கு தயாராக உள்ளனர் என்றும் கெஜ்ரிவால் கூறினார். குஜராத்தில் 20 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. 130க்கும் மேற்பட்டோர் இறந்த மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தையும் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்துகிறது. 182 இடங்களில் ஆம் ஆத்மிக்கு 90-95 இடங்கள் உறுதி. இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், இதே நிலை நீடித்தால் 140-150 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த முறை, ஆம் ஆத்மி கட்சி 182 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. 2017ல் 30 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பாஜக ஆட்சியால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். இந்த முறை குஜராத் மக்கள் மாற்றத்திற்காக எழுந்து நிற்பார்கள். பஞ்சாபை தொடர்ந்து, குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி எதிர்பார்க்கிறது.தேர்தல் தொடர்பாக கேஜ்ரிவால் குஜராத்தில் பலமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். டெல்லி போன்ற வளர்ச்சியை குஜராத்தில் கொண்டு வர ஆம் ஆத்மி உறுதியளிக்கிறது.

குஜராத்தில் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1ம் தேதியும், 2வது கட்டம் டிசம்பர் 5ம் தேதியும் நடக்கிறது. டிசம்பர் 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via