ஓபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் ஆலோசனை கூட்டம்

by Staff / 03-11-2022 04:50:03pm
 ஓபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் ஆலோசனை கூட்டம்

மதுரை அருகே, சோழவந்தானில் ஓபிஎஸ் ஆதரவு அணியின் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் தனியார் திருமண மஹாலில் அதிமுக ஓ. பன்னீர்செல்வம், அணி சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வாடிப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் திரவியம் என்ற வீரபத்திரன் தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் பொறுப்பாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்வில் வாடிப்பட்டி, மற்றும் அலங்காநல்லூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via