பிரபலங்களின் ட்விட்டர் கணக்கிற்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

by Staff / 07-11-2022 11:43:57am
பிரபலங்களின் ட்விட்டர் கணக்கிற்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பில்லியனரான எலான் மஸ்க் வாங்கியது முதலாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் ட்விட்டர் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனை குழுவும் நீக்கப்பட்டது. இதைதொடர்ந்து, ப்ளூ டிக் சலுகையை பெற கட்டணம் நிர்ணயித்ததுடன், ட்விட்டர் வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார். இந்நிலையில், பிரபலங்களின் பெயரில் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, பிரபலங்களின் பெயரில் அல்லது மற்றொருவர் பெயரில் தொடங்கப்படும் கணக்குகளில் பரோடி (Parodgy) என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும், அப்படி குறிப்பிடாத கணக்குகள் முன் அறிவிப்பின்றி நிரந்தரமாக முடக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via