கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே முதல்வர் வாழ்த்து

by Staff / 07-11-2022 11:58:04am
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே முதல்வர் வாழ்த்து

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி பல்வேறு பிரபலங்களும் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு .க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். "தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்" என்று வாழ்த்தினார்.

 

Tags :

Share via