ஊராட்சி மன்ற செயலாளரை தாக்கியதாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு

by Staff / 12-11-2022 04:21:11pm
 ஊராட்சி மன்ற செயலாளரை தாக்கியதாக ஊராட்சி  மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் சதிஷ்குமார் என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் அவரது கணவரும், அதிமுக ஒன்றிய செயலாளருமான அன்புராஜ் ஆகியோர் தாக்கியதாக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குலில் காயம் அடைந்த ஊராட்சி மன்ற செயலாளர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது பாண்டவர்மங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் தலைவராக இருப்பவர் கவிதா, இவரது கணவர் அன்புராஜ், இவர் அதிமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருபவர் சதிஷ்குமார். நேற்று மதியம் சதிஷ்குமார் பல்லாக்குசாலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் இருந்த போது, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் அவரது கணவர் அன்புராஜ் இருவரும் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதில் தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சதிஷ்குமார் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் அவரது கணவர் அன்புராஜ் இருவரும் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் அவரது கணவர் அன்புராஜ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சதிஷ்குமார் கூறுகையில் ஊராட்சியில் புதிய கட்டிட அனுமதி தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த விண்ணப்பங்களுக்கு தான் கையெழுத்துயிடவில்லை என்றும், இதனால் தங்களுக்குள் பிரச்சினை இருந்தது வந்ததாகவும், இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தான் ஒத்துழைப்பு வழங்கவில்லை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பிரச்சினை குறித்து தெரிவித்த ஆத்திரத்தில் நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்த போது தன்னையும், தனக்கு உணவு கொடுக்க வந்த மனைவியையும் ஊராட்சி மன்ற தலைவர் அவதூறாக பேசியதாகவும், பின்னர் தலைவரின் கணவர் மற்றும் தலைவர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார்.

இப்பிரச்சினை குறித்து கேட்பதற்காக ஊராட்சி மன்றதலைவர் மற்றும் அவரது கணவரை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி செயலாளர் சதிஷ்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்புராஜ் இடையே பிரச்சினை ஏற்பட்டு இது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்கில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதையெடுத்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் சமதானமாக செல்வதாக எழுதி கொடுத்துச் சென்றனர்.  இந்நிலையில் தான் ஊராட்சி மன்ற செயலாளர் மீது தாக்குதல் நடத்தியதாக பிரச்சினை எழுந்துள்ளது.

 

Tags :

Share via