அமெரிக்கா/ குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி?

by Editor / 25-06-2021 10:05:22am
அமெரிக்கா/ குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி?

தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவில் உள்ள மியாமி-டேட் கவுண்டியில் வியாழக்கிழமை அதிகாலை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென சீட்டுக்கட்டு போன்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 35-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம், பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மியாமி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு உதவித் தலைவர் ரைடு ஜடல்லா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.சம்பவம் நடந்தபோது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காணாமல் போனவர்களை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர், சேதம் குறித்த சரியான தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

1981 -ஆம் ஆண்டு மியாமி கடற்கரைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ள கடற்கரை நகரமான சர்ப்ஸைடில் கட்டப்பட்ட 136 குடியிருப்புகள் கொண்ட 12 மாடி சாம்ப்லைன் டவர்ஸ் உள்ளூர்நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் சீட்டுக்கட்டு போன்று இடிந்து சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்துள்ளது.

 

Tags :

Share via