குஜராத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய எம்.எல்.ஏ

by Staff / 10-12-2022 01:16:49pm
குஜராத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய எம்.எல்.ஏ

குஜராத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளர் மட்டுமே எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அகமதாபாத்தில் உள்ள ஜமால்பூர்-காடியா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் இம்ரான் கெடவாலா 13,658 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மூன்று சிட்டிங் எம்எல்ஏக்கள் உட்பட ஆறு இஸ்லாமிய வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்திய நிலையில், இம்ரான் மட்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.குஜராத் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இந்தத் தேர்தலில் பாஜக ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. இந்தத் தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via