ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கினார் ராஜன் செல்லப்பா

by Staff / 17-12-2022 03:17:54pm
ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கினார் ராஜன் செல்லப்பா

 திருப்பரங்குன்றம் எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்தநாள் மற்றும் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் அவரது மகள் பிரியதர்ஷினி உட்பட 51- ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம் மதுரை டி. குன்னத்தூரில் ஜெயலலிதா கோவிலில் வருகிற பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி நடக்கிறது இந்த திருமணத்தை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். இந்த திருமணத்திற்கு தனது பங்களிப்பை அளிக்கும் வகையில் அதிமுக அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ இவரது மனைவி மகேஸ்வரி செல்லப்பா ஆகியோர் ஆர்பி உதயகுமார் அவரது தாய் மீனாள், மனைவி தாமரைச்செல்வி, மகள் பிரியதர்ஷினி ஆகியோரிடம் தாலிக்கு தங்கம் வழங்கினர்.

 

Tags :

Share via