.மனிதர்களின் மூன்று விதமான குணங்கள் -பரமாத்மா கிருஷ்ணர்.

by Admin / 18-12-2022 09:59:49am
.மனிதர்களின் மூன்று விதமான குணங்கள் -பரமாத்மா கிருஷ்ணர்.

அர்ஜீனன் கேட்கிறான்,"சத்வகுணம் என்றால் என்ன?".
கிருஷ்ணபரமாத்மா,"சத்வகுணம் தூய்மையானது.அதில் எந்தவிதமான மாசும் கிடையாது.ஆகவே,அது நம்மை பிரகாசப்படுததுகிறது.நமது உள்ளத்திலும் புலன்களிலும் ஒளிகூடுகிறது.தூக்கம் ,தடுமாற்றம்,தீய செயல்கள்,தூய குணங்களை நம்மை விட்டு அழிக்கிறது.ஆகவே ,நமக்கு அமைதி கிடைக்கிறது.நமது சத்வகுணம் பெருகுமானால்மனதில் உள்ள சஞ்சலம் தானாக நீங்கிவிடும்.நமது உள்ளத்தில் உள்ள எல்லா புலன்களிலும் உள்ள துக்கமும் சோம்பலும்அகன்று விழிப்புணர்வு வளர்கிறது."
அர்ஜீனன்-"ரஜோகுணம் என்றால் என்ன?."
கிருஷ்ணர்-ஆசைகளினாலும் பற்றுதல்களினாலும் ரஜோகுணம் உண்டாகிறது.அதே போல ரஜோ குணத்தினால்
ஆசையும் பற்றும் உண்டாகிறது.விதையும் மரமும் போல இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை.விதையினால்
மரம் உண்டாகிறது.மரத்திலிருந்து விதை கிடைக்கிறது.இருந்தாலும் விதையை உண்டாக்கக்கூடிய மரம் விதையினால்
தான் உண்டாகிறது.ஆகவே மரம் உண்டாவதற்கு காரணமும் விதைதான்.அந்த மரத்தில் இருந்து விதை உண்டாவதற்கு காரணமும் விதைதான்.ஆகவே,ஆசை பற்று இவைகளுக்கு மூல காரணம் ரஜோகுணம் ஆகும்.
அர்ஜீனன்-"தமோ குணம் எப்படிப்பட்டது."
கிருஷ்ண பரமாத்மா-"நமது உள்ளத்திலும் புலன்களிலும் உள்ள அறிலையும் சக்தியையும் இழக்கச்செய்து மயக்கத்தைஉண்டாக்கக்கூடியது தாமோ குணம்.நமது உடலில் நாம் நமது என்ற அபிமானம் கொண்ட மனிதர்களுக்கும்,பிராணிகளுக்கும் அதன் உள்ளங்களில் ஒருவித மயக்கம் ஏற்படுகிறது.அப்போது மனிதர்கள் உள்எல்லா உயிரினங்களுக்கும் தானே உயர்ந்தவர்கள்  என்று  கருதுகிறார்கள் .ஆனால் தன்நிலையில்  நியாயமாகவும்உறுதியாகவும்இருப்பவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படுவது இல்லை.மன உறுதி இல்லாதவர்களைதாமோ குணம்  வென்று விடும்.உறுதியான மனமும் அறிவும் உள்ளமும் கொண்டவர்கள் தாமோ குணத்தை வென்று விடுவார்கள்.அர்ஜீனா மூன்று வித குணங்களில் ஏதாவது ஒருகுணம் .மற்ற இரண்டு குணங்களை வென்று விடும்.அளரவர்களின் மனவுறுதியை பொறுத்து இவ்வாறு குணங்கள் மாறுபடுகிறது."

 

Tags :

Share via