நீ கடமையைச்செய்

by Admin / 24-12-2022 08:38:44pm
நீ கடமையைச்செய்


கிருஷ்ணர்- "அர்ஜீனா,இப்போது நாம் இருப்பது போர்க்களம்.போர்க்களத்திற்கு வந்து விட்ட பிறகு போர் புரிவது தான்உன்னைப்போன்ற சத்திரிய வீரனின் கடமை.இப்போது உனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மனப்பாங்கை சான்றோர்கள்ஏற்க மாட்டார்கள்.புத்திசாலியான நீ இந்த நேரத்தில் கோழைத்தனத்தை எப்படி அடைநதாய். ? நீ இப்போது போர்செய்யாமல் இருந்தால் அது உன் புகழைக்கெடுக்கும்.உனக்கு சொர்க்கமும் கிடைக்காது "நீ எதரிகளுக்கு பயத்தை உண்டாக்குபவன்.சக்தி வாய்ந்த பல அரக்கர்களை நீ எளிதாக தோற்கடித்தவன்.நீ போருக்கு அஞ்சும் கோழைகளைப்போல பேசாதே.இது போன்ற பேச்சும் கோழைத்தனமும் உன்னைப்போன்ற மாவீரனுக்கு ஏற்றதல்ல. ஆகவே,உடனே எழுந்து போருக்காக நிமிர்ந்து நில்.

"அர்ஜீனர்-"கிருஷ்ணா நானோபோரினால் உண்டாகப்போகும் குலநாசத்தைப் பற்றி கவலைப்படுகிறேன்.நீங்களோ போர்புரிவதுதான் எனது கடமை என்று கூறுகிறீர்கள்.அப்படி நான் என் கடமையை செய்வதால் அதன் பலன் தீமையாகஅல்லவா முடியும்

..
கிருஷ்ணர்-"அர்ஜீனா ஒருவன் தனது கடமையை செய்யும் போது அதனால் உண்டாகும் நன்மை தீமைகளைப்பற்றி கவலைபபடக்கூடாது. நீ உனது கடமையை செய்வதற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது.நீ உன் கடளமயைச்செய்வதால் உண்டாகும நன்மை தீமைகளில் உனக்குஎந்த உரிமையும் இல்லை.ஆகவே நீ உன் கடமையைச்செய்.பலனை எதிர்பார்க்காதே."

 

Tags :

Share via