விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல்

by Staff / 14-01-2023 03:44:34pm
விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல்

டெல்லியை சேர்ந்தவர் அபினவ். இவர் தனது நண்பர்களை காதலிகளுடன் சேர்த்து வைப்பதற்காக, அவர்கள் செல்ல இருந்து விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். போலி முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கி, அந்த நம்பரில் இருந்து மிரட்டல் விடுத்தவர், தனது நண்பர்களுக்கும் அதே நம்பரில் இருந்து போன் செய்ததில் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via