அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் விலக்கு:சமூக நீதிக்கான போராட்டம் -கனிமொழி கருணாநிதி

by Editor / 21-01-2023 09:14:26pm
 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் விலக்கு:சமூக நீதிக்கான போராட்டம் -கனிமொழி கருணாநிதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கர்ப்பிணி பெண்களுக்கு மேள தாளங்கள் முழங்க சந்தனம் பூசி,
மாலை அணிவித்து வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
பின்னர் பேசியதாவது:இந்த மருத்துவமனை சீரோடும் சிறப்போடும் இருப்பதற்கும் சுகாதார நிலையத்தை ஒன்றியஅரசு உட்பட அனைவரும் பாராட்டு வகையில்  அமைய உறுதுணையாக இருந்த வைகோ அவர்களே மனதார பாராட்டுகிறேன் எனவும்,

மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவதற்கு கோரிக்கை விடுத்த நிலையில் அதனை கூடிய விரைவில் ஏற்பாடு செய்ய உறுதுணையாக தமிழக அரசு துணி நிற்கும் ,

கருத்துக்களை எளிதில் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சிறப்பாக உரையாற்றும் திறமை படைத்தவர் வைகோ என முத்தமிழ் அறிஞர் கலைஞரின் போர்வாள் என புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு முதல்வர்  அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டுமென சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அந்தப் போராட்டம் சமூக நீதிக்கான போராட்டம் ஆகும் மக்களுக்கு எளிதில் மருத்துவம் கிடைக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என  தெரிவித்தார்.
மேலும் முத்தமிழர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் வருமுன் காப்போம் என்ற திட்டத்தை அமல்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டது அதன் நீட்சியாக தற்போது தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வீடு தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 

 

Tags :

Share via