இந்தியாவுக்கு மேலும் 12 சிறுத்தைகள்

by Staff / 28-01-2023 11:55:44am
இந்தியாவுக்கு மேலும் 12 சிறுத்தைகள்

தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிறுத்தைகள் இந்தியாவிற்கு வருகின்றன. அடுத்த மாதம் 15ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு ஏழு ஆண் மற்றும் 5 பெண் சிறுத்தைகள் கொண்டு வரப்படும். இதற்காக தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 12 சிறுத்தைகளை அனுப்பவுள்ளதாக தென்னாப்பிரிக்க சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via