திமுக சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

by Editor / 28-01-2023 11:25:35pm
 திமுக சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் திருவிழாவில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வழக்கறிஞரை தாக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் உள்ள சுடலைமாடசுவாமி கோவிலில் இன்று திருவிழா நடைபெற்ற சூழலில், திருவிழாவில் பங்கேற்ற சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று ஆடிப்பாடி திருவிழாவை கொண்டாடிய சூழலில், சிந்தாமணி பகுதியில் கறி விருந்து நடைபெற்றுள்ளது.சொந்த ஊரில் நடைபெற்ற  இந்த விருந்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜாவும் பங்கேற்றுள்ளார்.

இந்த விருந்தின் போது,அந்தப்பகுதியில் உள்ள நிலப்பிரச்னை காரணமாக அதே பகுதியை சேர்ந்த வருக்கும் எம்.எல்.ஏ. ராஜாவுக்கும் முன் பகை இருந்த நிலையில் இந்த விருந்தில் பங்கேற்ற பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான ராஜ்குமார் காரணம் என நினைத்து  தாக்கியதாக கூறப்படுகிறது. இதில்  பி.ஜே .பி.வழக்கறிஞர்  ராஜ்குமார் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  பி.ஜே .பி.வழக்கறிஞர்  ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தென்காசி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது, சிந்தாமணி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் அந்த பகுதியில் வீடு கட்டி வரும் சூழலில், அது தொடர்பாக சங்கருக்கும், எம்.எல்.ஏ. ராஜாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், அந்த பிரச்சனையில் பாஜக பிரமுகரான ராஜ்குமார் என்பவருக்கும் தொடர்பிருப்பதாக கூறி எம்.எல்.ஏ ராஜா, பி.ஜே .பி.வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தற்போது ராஜ்குமார் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சூழலில், சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags :

Share via