கொடைக்கானல் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவிப்பு

by Staff / 01-02-2023 03:29:07pm
கொடைக்கானல் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிகள் எல்கைக்குள் நுழையும் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.  இந்த கட்டணம் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு ஆணையின்படி வசூலிக்கப்படுகிறது.  இதன்படி சுற்றுலா பேருந்து , பேருந்து , லாரி , வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.சுற்றுலா பேருந்துக்கு ரூ. 250, பேருந்துக்கு ரூ. 150, லாரிக்கு (கனரக வாகனங்களுக்கு) ரூ. 100, வேன், மினி, லாரி, டிராக்டர் தலா ரூ. 80, சுற்றுலா சிற்றுந்து வாடகை ரூ. 60-ம் வசூலிக்கப்படுகிறது.  மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் இல்லை.இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.  இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  நுழைவு கட்டணம் கட்டி, உள்ளே சென்று பார்த்தால் அங்கும் பல கட்டணங்கள் கட்ட வேண்டிய நிலையில் உள்ளதால் பயணிகள் அதிருப்தி அதிகமாகியுள்ளது.

 

Tags :

Share via