தூத்துக்குடி பெருமாள் கோவில் திருப்பணிகள் கனிமொழிஎம்.பி , அமைச்சர் சேகர்பாபு ஆய்வு 

by Editor / 03-07-2021 04:21:35pm
தூத்துக்குடி பெருமாள் கோவில் திருப்பணிகள் கனிமொழிஎம்.பி , அமைச்சர் சேகர்பாபு ஆய்வு 

 

தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக விழா நடைபெறவில்லை. மேலும் பல்வேறு திருப்பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன் வளம்,மீனவர் நலம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
ஆய்வின்போது, பெருமாள் கோயிலில் ரூ.90 இலட்சம் மதிப்பில் சுவாமி கர்ப்பகிரகம்,பூமாதேவி மற்றும் ஸ்ரீதேவி சிலை உள்ள பகுதிகள் சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளுக்கான பணிகளை ஆய்வு செய்து உடனடியாக பணிகளை தொடங்க உத்தரவிட்டனர். மேலும், அங்கு கல் மண்டபம் அமைப்பது குறித்தும், கும்பாபிஷேகம் நடத்துவது குறித்தும் கலந்தாய்வு மேற்கொண்டனர். ஆலைய கமிட்டியை சீரமைத்து மேற்கண்ட திருப்பணிகளை மேற்கொள்ளவது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உத்தரவிட்டனர்.. 
பின்னர்  அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், தூத்துக்குடி பெருமாள் கோவிலில் ரூ.5கோடியில் ராஜகோபுரம் உட்பட ரூ.10 கோடி மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் ஓராண்டிற்குள் நிறைவு பெறும் என்று தெரிவித்தார். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்களுக்கு பிரதான பட்டர்கள் செல்வம் மற்றும் வைகுண்ட ராமன் தலைமைையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். 

 

Tags :

Share via