மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் மீது  நடவடிக்கை பொதுமக்கள்புகார்.

by Editor / 10-02-2023 03:34:44pm
 மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் மீது  நடவடிக்கை பொதுமக்கள்புகார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில்  அரசு உதவி பெறும் சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளிசெயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் படித்து வரும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகளிடம் அப்பள்ளியின் தமிழாசிரியர் பாலசுப்பிரமணியர்  இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசியதாக மாணவர்கள் தங்களது ஊர் சமுதாய தலைவர்களிடம் கூறியதாக.... அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி  இந்து ..மகாசபை எனும் அமைப்பினர் சார்பில் சிவகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு  புகார் மனுஒன்றினை கொடுத்துள்ளனர்.அந்தமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தங்களது சமுதாயத்தைச் சார்ந்த மாணவ,மாணவிகள் சுமார் 200 பேர் சிவகிரியில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருவதாகவும் பள்ளியில் பணி புரியும் பாலசுப்பிரமணியம் என்ற ஆசிரியர் தொடர்ந்து மாணவீரிடம் தவறாக இரட்டை அர்த்தத்தில் பேசுதல் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் சாதிய ரீதியாக தொடர்ந்து மாணவர்களுக்கு மனதை பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக பேசுவதாக கூறி மாணவ மாணவிகள் பெற்றோரிடமும்,சமுதாய பெரியவர்களிடமும்  இதுகுறித்து புகார் தெரிவித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர் முருகன் என்பவர் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் மாணவ,மாணவிகள் தங்களது பெற்றோருடன்  திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு திரண்டிருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.சம்பந்தபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் மீது  நடவடிக்கை பொதுமக்கள்புகார்.
 

Tags :

Share via