விமானம் விழுந்து பெரும் தீ விபத்து; 6 பேர் பலி

by Staff / 18-10-2022 10:33:11am
விமானம் விழுந்து பெரும் தீ விபத்து; 6 பேர் பலி

ரஷ்யா தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது வானில் பறந்து வந்த ராணுவ விமானம் திடீரென தீப்பிடித்தபடி மோதி விபத்திற்குள்ளானது. இதனால் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது. இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 6 பேர் பலியானதாகவும், இரண்டு குழந்தைகள் உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர் என்றும் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில், சுகோய்-34 ரக ஜெட் போர் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த நிலையில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. . உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறபப்டுகிறது.

 

Tags :

Share via