ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

by Staff / 17-02-2023 12:05:37pm
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் கத்ரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மைய அறிக்கையின் படி, அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. கத்ராவிலிருந்து கிழக்கே 97 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via