மதுரைக்கும் ஹவுராவுக்கும் இடையில் கால அட்டவணைப் படுத்தப்பட்ட வாராந்திர பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை

by Staff / 24-02-2023 03:47:35pm
மதுரைக்கும் ஹவுராவுக்கும் இடையில் கால அட்டவணைப் படுத்தப்பட்ட  வாராந்திர பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை

இந்திய இரயில்வே மற்றும் இந்திய அஞ்சல் துறையின் கூட்டு முயற்சியாக,  கூடல்நகர் (மதுரை) மற்றும் சங்க்ரைல் (ஹவுரா) ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே, அட்டவணைப் படுத்தப்பட்ட  வாராந்திர பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 22.03.2023 முதல்  இயக்கப்படுகிறது.  இந்த ரயில் 15 உயர் கொள்ளளவு  கொண்ட பார்சல் வேன்களுடன் இயக்கப்படுகிறது.

வழக்கமான சேவை

ரயில் எண். 00661 கூடல்நகர்- சங்க்ரைல்  பார்சல் எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு புதன்கிழமையும் கூடல்நகரில் இருந்து அதிகாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மதியம் 13.00 மணிக்கு சங்க்ரைலைச் சென்றடையும்.
 
இந்த ரயில் சராசரியாக மணிக்கு 38.3 கிமீ வேகத்தில் 2,177 கிமீ தூரத்தை 57.15 மணி நேரத்தில் கடக்கும்.
     
மறு மார்க்கத்தில், ரயில் எண். 00662 சங்க்ரைல் - கூடல்நகர்  பார்சல் எக்ஸ்பிரஸ், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சங்க்ரைலில் இருந்து இரவு 11.00 மணிக்குப் புறப்பட்டு, திங்களன்று 01.30 மணிக்கு கூடல்நகரைச் வந்து சேரும். 

 இந்த ரயில் 50.30 மணி நேரத்தில் 2,177 கிமீ தூரத்தை கடக்கும். இந்த ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 43.11 கிமீ ஆகும்.

இரு மார்க்கத்திலும் இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தாம்பரம், கூடூர், விஜயவாடா, குடிவாடா, அக்கிவிடு, பீமாவரம் டவுன், ராஜமுந்திரி, பாலசூர், காரக்பூர், பன்ஸ்குரா மற்றும் மெச்செடா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரை கோட்ட எல்லைக்குள் உள்ள வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விரைவாக கொல்கத்தா பகுதிக்கு அனுப்ப முதன்மை வணிக ஆய்வாளர்கள் 
ஏ.ஜே.ஜெயச்சந்திரன், அலைபேசி எண் 9003862954,
பி.கே.மார்த்தாண்டன், 9843788825,  
அஞ்சல் துறை வர்த்தக அலுவலர்
ஜே.ஜெயக்குமார், 81221 32256 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
 

 

Tags :

Share via