சட்டசபையில் அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பது எங்கள் நோக்கம்-அப்பாவு

by Editor / 25-02-2023 09:56:48pm
சட்டசபையில் அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பது எங்கள் நோக்கம்-அப்பாவு

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியானது தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, நூற்றாண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 இந்த விழாவிற்கு, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக வருகை தந்து மாணவர்கள் மத்தியில் இ.சி.ஈ. ஈஸ்வரன் பிள்ளை குறித்தும், அந்த பள்ளி தொடங்கப்பட்ட வரலாறு குறித்தும் சிறப்பாக பேசினார். தொடர்ந்து இ.சி.ஈஸ்வரன் பிள்ளை பள்ளி குறித்தான நூற்றாண்டு மலரை வெளியிட்டார்.

இந்த விழாவில், சட்டமன்ற உறுப்பினர்களும், தென்காசி நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெருமக்களும் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி:-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு தேர்தல் பரப்புரையில் கூறியதுபோல், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 தகுதியுள்ள நபருக்கு இந்த ஆண்டு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயப் பணிகள் நிறைந்த பகுதிகளில் வனவிங்குகள் சேதப்படுத்துவது குறித்த புகார்கள் தொடர்ச்சியாக வந்துள்ளது. அது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.தொடர்ந்து, சட்டப்பேரவில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இருக்கை வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை என்னிடம் உள்ளது. அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பது எங்கள் நோக்கம் என அவர் பதிலளித்தார்.

 

Tags :

Share via