ஈ.வி.கே.எஸ்.இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான்-உதயநிதி ஸ்டாலின்

by Editor / 02-03-2023 07:30:44pm
 ஈ.வி.கே.எஸ்.இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான்-உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரீனா விளையாட்டு மைதானத்தில் தளபதி கோப்பை பெண்கள் T20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இன்று தொடங்கி 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்கிறது. இந்த போட்டியினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து விளையாட்டு மேம்பாட்டு அணியின் இலட்சினையையும் வெளியிட்டார். பின்னர் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டு மைதானத்திற்கு உள்ளே சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடினார்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஈரோடு கிழக்கு தொகுதியில் இவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான் என்று கூறிய அமைச்சர் உதயநிதியிடம் , அதிமுக பின்னடைவு குறித்த கேள்விக்கு பதிலளித்தது பேசிய உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் ஒருவருடைய வெற்றியை தான் பார்க்கிறேனே தவிர , மற்றவர்களின் தோல்வியை நான் பார்க்கவில்லை என்று கூறினார்.இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

 ஈ.வி.கே.எஸ்.இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான்-உதயநிதி ஸ்டாலின்
 

Tags :

Share via