தென்மாவட்ட ஆய்வுக்கூட்டம் மதுரை வந்தார்  முதல்வர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 05-03-2023 10:53:22am
தென்மாவட்ட ஆய்வுக்கூட்டம் மதுரை வந்தார்  முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தென் தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மதுரை வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து 9:40 மணியளவில் புறப்பட்டு தற்போது மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை வந்த தமிழக முதல்வரை விமான நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித்சிங் காலோன் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய ஐந்து மாவட்ட பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார், அதன் பிறகு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வுக்கு பிறகு மாலை 4 மணி அளவில் மீண்டும் சட்டத்துறை ரீதியான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

பின்னர் மாலை 6 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியம் சென்று முடிவு பெற உள்ள நிலையில் உள்ள அருங்காட்சியத்தை பார்வையிடுகிறார். பின்பு மதுரையில் ஓய்வு எடுத்துவிட்டு. 

நாளை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார் மீண்டும் மாலைக்கு மேல் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்ல உள்ளார்.

 

Tags :

Share via