ராசி பலன்கள்-19.03.22

by Editor / 19-03-2022 08:28:33am
ராசி பலன்கள்-19.03.22

 

மேஷம்
மார்ச் 19, 2022

சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புரிதலும், அனுபவமும் மேம்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


அஸ்வினி : தடைகள் விலகும். 

பரணி : மேன்மை உண்டாகும்.

கிருத்திகை : அனுபவம் மேம்படும்.
---------------------------------------


ரிஷபம்
மார்ச் 19, 2022

குழப்பம் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு


கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும். 

ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும். 

மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும்.
---------------------------------------

மிதுனம்
மார்ச் 19, 2022

வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பயணம் கைகூடும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


மிருகசீரிஷம் : நன்மையான நாள். 

திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். 
---------------------------------------


கடகம்
மார்ச் 19, 2022

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்


புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

பூசம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.

ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


சிம்மம்
மார்ச் 19, 2022

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


மகம் : மாற்றமான நாள். 

பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------


கன்னி
மார்ச் 19, 2022

சிந்தனையில் புதிய தெளிவும், உற்சாகமும் காணப்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் பிறக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


உத்திரம் : உற்சாகமான நாள். 

அஸ்தம் : மனவருத்தங்கள் குறையும். 

சித்திரை : மாற்றம் பிறக்கும். 
---------------------------------------


துலாம்
மார்ச் 19, 2022

சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாட்கள் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். உதவி கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

சுவாதி : மாற்றம் ஏற்படும்.

விசாகம் : அனுபவம் மேம்படும்.
---------------------------------------


விருச்சிகம்
மார்ச் 19, 2022

வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு


விசாகம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 

அனுஷம் : மேன்மை உண்டாகும். 

கேட்டை : முன்னேற்றமான நாள். 
---------------------------------------


தனுசு
மார்ச் 19, 2022

சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மூலம் : வெற்றிகரமான நாள். 

பூராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும். 

உத்திராடம் : இலக்குகள் பிறக்கும். 
---------------------------------------


மகரம்
மார்ச் 19, 2022

உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் புது உற்சாகத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். திருப்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 
உத்திராடம் : உற்சாகமான நாள். 

திருவோணம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

அவிட்டம் : அனுபவம் உண்டாகும். 
---------------------------------------

கும்பம்
மார்ச் 19, 2022

விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். நண்பர்களின் உதவியால் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அவிட்டம் : கவனம் வேண்டும். 

சதயம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும். 

பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 
---------------------------------------

மீனம்
மார்ச் 19, 2022

வர்த்தகம் சார்ந்த துறைகளில் புதுவிதமான நுட்பங்களுடன் லாபத்தை மேம்படுத்துவீர்கள். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வும், மந்தத்தன்மையும் குறையும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்


பூரட்டாதி : முன்னேற்றமான நாள். 

உத்திரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.

ரேவதி : சோர்வு அகலும்.
---------------------------------------

 

Tags : ராசி பலன்கள்-19.03.22

Share via