நெல்லை, தூத்துக்குடியில் அமித்ஷா பிறந்தநாள்

by Reporter / 22-10-2021 07:54:06pm
நெல்லை, தூத்துக்குடியில் அமித்ஷா பிறந்தநாள்


நெல்லை, தூத்துக்குடியில் தேவேந்திர சேனா அமைப்பின் சார்பில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் விழா கொண்டாட்டப் பட்டது..


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 57வது பிறந்த நாள் விழா 'தேவேந்திர சேனா அமைப்பு சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்தது;


தேவேந்திர சேனா அமைப்பு தலைவர் ஆர்.சேகர் (ஐ ஆர் எஸ் பொதுச் செயலாளர்) பேராசிரியர் பி.மனோகர், பொருளாளர் வி. ரவிசங்கர் ஆகியோரின் ஆலோசனையின்படி தேவேந்திர சேனா துணைத் தலைவர், கல்வியாளர், முனைவர் அ.குணசேகர் தலைமையில்,நெல்லையப்பர் கோவில் மற்றும் வண்ணாரபேட்டை பேராச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பாளை சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதன் பின் பாளை நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞர்கள், பொது மக்களுக்கு இனிப்பு அளிக்கப்பட்டது. மாணாக்கருக்கு கல்வி உபகரணம் வழங்கபட்டது.

மேலும் மேல புத்தனேரி செல்லம்மன் கோவில் சிறப்பு வழிபாடு, இனிப்பு வழங்குதல் , பாறைக்குளம் கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோவில் சிறப்பு வழிபாடு, மரக்கன்று நடுதல், ராஜகோபாலபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.


தொடர்ந்து வண்ணார்பேட்டை முருகன் கோயில்,  கன்னி விநாயகர் திருக்கோயில், நாங்குனேரி மற்றும் திருக்குறுங்குடி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளில் தேவேந்திர சேனாவின் சார்பில் பொதுமக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. மேலும் 57  மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வழங்குதல் , சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேவேந்திர சேனா நிர்வாகிகள் அ.க.ஸ்டாலின், பா. அருமைத்துரை, மா. சைலபதி, சு.மாரி துனரசாமி, என்.பாஸ்கர்,பி. பிரகாஷ், மேலபுத்தனேரி சுபாஷ், முத்துக்குமார், பாறைக்குளம் உலகராஜா, ராஜகோபாலபுரம் பாஜக ராஜபாண்டி, வேல்முருகன் ஆகியோர் பங்குபெற்றனர்.

 

Tags :

Share via