2 பவுன் சங்கிலி நிவாரணம் அளித்த  பெண்ணுக்கு பணி தமிழக அரசு உத்தரவு

by Editor / 15-06-2021 04:41:08pm
2 பவுன் சங்கிலி நிவாரணம் அளித்த  பெண்ணுக்கு பணி தமிழக அரசு உத்தரவு



தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  மேட்டூர் பயணம் செய்தபோது இளம்பெண் செளம்யா என்பவர் தனது இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை கொரோனா நிவாரண நிதியாக அளித்து அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார். இந்த கடிதத்தை தனது டுவிட்டரில் முதல்வர் பதிவு செய்திருந்தார் என்பதும், இளம்பெண் செளம்யாயின் இந்த கடிதம் வைரலானது .
மேலும் செளம்யா தனது கடிதத்தில் குடும்ப வறுமையை குறிப்பிட்டு தனக்கு வேலை வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தார். அவரது கடிதத்தை படித்த போது நெகிழ்ச்சியாக இருந்தது என்று முதல்வர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு விரைவில் அவருக்கு பணியானை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் சேலம் மேட்டூரில் முதல்வர் ஸ்டாலின் பயணத்தின்போது நிவாரணமாக நகையைத் தந்த செளம்யாவுக்கு பணிநியமன ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 சௌமியாவின் பணி நியமன ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கினார்.இதனை அடுத்து இளம்பெண் சௌமியா தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்,அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via