தமிழகம் முழுவதும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை..

by Editor / 16-03-2023 07:49:16am
 தமிழகம் முழுவதும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை..

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.

வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி நாகராஜன், தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி, சப் - இன்ஸ்பெக்டர் ரபீக் ஆகியோர் 7பேர் கொண்ட குழுவினர்  நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூபாய் 44,710 சிக்கியது.

திருவள்ளூர் ராஜாஜி புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மதியம் 3மணி முதல் இரவு 12 மணி வரை சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்.

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே பிள்ளுகோட்டை அரசு நெல் கொள்முதல்  மையத்தில் DSP ஜான் பிரிட்டோ தலமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில்  விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 320 நெல்முடைகளில் மூடைக்கு 30 ரூபாய் வீதம் கமிஷன் பெற்றதாக கிடைத்த தகவல் பேரில் பில் கலெக்டர் அர்ஜுனன் என்பரிடம் கணக்கில் வராத பணம்  9600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இணை சார் பதிவாளர் அலுவலகம்-2ல்  லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் மைதிலி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினரின் தீடிர் சோதனையில் சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் 2 பேர் மற்றும்  புரோக்கர்கள் 2 பேரிடம் என நான்கு பேரிடமிருந்து 63,720 ரூபாய் பணம் பறிமுதல்.

ஊத்துக்கோட்டை ஆர் டி ஓ சோதனை சாவடியில் டிஎஸ்பி யுவராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 10 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல்.

திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை. கணக்கில் வராத ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல்.

தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 37 ஆயிரம் ரூபாய் பறிமுதல்.

நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல்:

நெல்லை சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டராக பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் வயது 53 என்பவர் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்டதாக ரகசிய தகவல் வந்ததை எடுத்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி எஸ் கால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராபின் ஞானசிங் சாந்தி சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முக நாயனார் மாரியப்பன் மற்றும் தலைமை காவலர்கள் அடங்கிய குழு அங்கு சென்று திடீர் தணிக்கை.

 ராஜாஜிபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் தற்போது நிலவரப்படி சுமார் 85 ஆயிரம் வீடுகளுக்கு கட்டுவதற்கு லஞ்சம் வாங்கியது மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி வீடுகள் வழங்கியது உள்ளிட்ட முறை தற்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் திடீர் சோதனை. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜனிடமிருந்து 27 ஆயிரத்து 400 மற்றும் தனி நபர்கள் நான்கு பேரிடமிருந்து 23 ஆயிரத்து 300 என கணக்கில் வராத  50 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சார் பதிவாளர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியர் மற்றும் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பூமிநாதன்  தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 3 பத்திரபதிவு எழுத்தர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 100 ம் அலுவலகத்திற்குள் ஊழியர்களுக்கு சொந்தமான டிபன் பாக்ஸ், சாமி போட்டோ பின்பகுதி, அலமாரி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.9 ஆயிரம் உட்பட மொத்தம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 100 ஐ பறிமுதல்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தமிழக-ஆந்திரா எல்லைப்பகுதியான பொன்பாடி போக்குவரத்துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான போலீசார் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை.

ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை, கணக்கில் வராத 15 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி விசாரணை.


வேலூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை. 

கன்னியாகுமரி  மாவட்ட  வடசேரி வடக்கு மற்றும் தெற்கு   கிராம நிர்வாக  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு  டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.

திருவள்ளூர்   மாவட்டம்  ஊத்துக்கோட்டை ஆர் டி ஓ சோதனை சாவடியில் டிஎஸ்பி யுவராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சோதனை.

தூத்துக்குடி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு  டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரின் திடீர் சோதனை.

குளித்தலை செய்தியாளர் வீர தியாகராஜன். குளித்தலை அருகே தரகம்பட்டியில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜ் தலைமையில் போலீசார் சோதனை.

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் போக்குவரத்து துறையில் ஆர்டிஓ சோதனை சாவடி உள்ளது இங்கு இந்த வழியாக செல்லக்கூடிய கனரக வாகனங்களை மடக்கி அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரையடுத்து ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் வர்ணிகா ஸ்ரீ தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் ஊழியர்கள் கையில் வைத்திருந்த லஞ்ச பணத்தை அள்ளி வீசினார்கள்.

 திருவள்ளூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஏழு பேர் கொண்ட க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.

திருப்பூர் - நெருப்பெரிச்சல், பத்திரப்பதிவு அலுவலகத்திலும், சிறுபூலுவப்பட்டி வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இணை சார்பதிவாளர் 2 அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் முருகன் தலைமையில் சோதனை.

நாகை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலக கதவுகளை மூடி சோதனை.

தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.இப்படி தமிழகமெங்கும் நடந்த இலஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனையில் பல இலட்சம் ரூபாய்வரை பிடிபட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags :

Share via