13 மாவட்டங்களில் இடி..மின்னலோடு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

by Editor / 18-03-2023 09:52:54am
13 மாவட்டங்களில் இடி..மின்னலோடு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. மேலும் வருகிற மார்ச் 21ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில், சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் அடுத்து 3 மணி நேரங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானந்த முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கோயம்புத்தூர் நீலகிரி ஈரோடு தர்மபுரி திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்து மூன்று மணி நேரங்களுக்கு ஓரிரு இடங்களில் இனி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via