கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் பலி -முதல்வர்-இரங்கல்

by Editor / 05-06-2022 11:27:31pm
 கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் பலி -முதல்வர்-இரங்கல்

கடலூர் மாவட்டம் குச்சிபாளையம் அருகே கெடிலம் ஆறு உள்ளது. இங்குக் கோடை வெயிலின் தாக்கத்தால் கர்ப்பிணி பெண்,செவிலியர் மற்றும் சிறுமிகள் உள்பட 8 பேர் குளிக்கச் சென்றுள்ளனர். அதில் ஏழு பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கிக் குளித்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற சுமந்தா,பிரியா , நவநீதா, ஆகிய மூன்று இளம் பெண்கள் மற்றும் சங்கீதா , மோனிஷா , திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகிய நான்கு சிறுமிகள் என மொத்தம் 7 பேர் தண்ணீரில் மூழ்கினர். 

இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கவே 
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 7 பேரையும் சடலமாக மீட்டுள்ளனர். பிறகு அவர்களது உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 இந்த சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்கச் சென்ற 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.7 பேர் உயிரிழந்த துயர செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.உயிரிழந்தோரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் பலி -முதல்வர்-இரங்கல்
 

Tags : 7 killed in Kedilam river -Chief - mourning

Share via