ஆபாச வீடியோ: வாலிபர் கைது

by Staff / 29-03-2023 01:56:32pm
ஆபாச வீடியோ: வாலிபர் கைது

பெண்களை வீடியோ எடுத்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட வாலிபரை, போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தழுதாளியைச் சேர்ந்தவர் அலாவுதீன் மகன் முகமது ஜிபேர் (23). புதுச்சேரி சாலையில் மளிகைக்கடை வைத்துள்ளனர். தந்தை அலாவுதீன் இல்லாதபோது ஜிபேர் வியாபாரம் செய்வது வழக்கம். அப்போது கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து, அதை ஆபாசமாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 5 பேர் திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து ஜிபேர் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via