முன்னாள் முதல்வருக்கு முத்தம் கொடுத்த பெண்

by Staff / 02-04-2023 02:42:06pm
முன்னாள் முதல்வருக்கு முத்தம் கொடுத்த பெண்

பெங்களூரு யஷ்வந்தர்பூர் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட ​​முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமிக்கு பெண் ஒருவர் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகிவருகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி, மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பஞ்சரத்ன யாத்திரை நடக்கிறது. இந்நிலையில் குமாரசாமி நேற்று யஷ்வந்தர்பூர் சட்டமன்றத் தொகுதியின் மாருதி நகரில், தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசி முடித்த பின் குமாராசாமி நின்றிருந்த வாகனத்தில் ஏறியபின் ஒருவர் திடீரென, குமாரசாமியின் தலையை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்.

 

Tags :

Share via