அடேயப்பா ஒரு மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காதா ?

by Editor / 09-07-2021 07:11:57pm
அடேயப்பா ஒரு மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காதா ?

 


இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது. அதன்படி ஜூலை மாதம் வங்கிகளில் அதிக விடுமுறை நாட்கள் உள்ளன. அதாவது 14 நாட்கள் விடுமுறை நாட்கள் கொண்ட ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.  மாநில வாரியாக மத விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களின் கீழ்வரும் 9 விடுமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ஜூலை 10 -இரண்டாவது சனிக்கிழமை ,
ஜூலை 11 - ஞாயிறு விடுமுறை
ஜூலை 12 திங்கட்கிழமை- காங் (ரதஜாத்ரா) / ரத் யாத்திரை. இந்த பண்டிகையின் போது புவனேஸ்வர், இம்பால் மாநிலத்தில் வங்கிகள் செயல்படாது.
ஜூலை 13 - செவ்வாய்க்கிழமை - பானு ஜெயந்தி. சிக்கிம் மாநிலத்தில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
ஜூலை 14 - புதன்கிழமை - ட்ருக்பா செச்சி. இந்த பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
ஜூலை 16 - வியாழக்கிழமை - ஹரேலா பூஜா. இந்த பண்டிகையின் போது உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
ஜூலை 17 - சனிக்கிழமை - யு டிரோட் பாடும் நாள் / கார்ச்சி பூஜை. இந்த பண்டிகையின் போது அகர்தலா மற்றும் ஷில்லாங் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
ஜூலை 18 ஞாயிறு (வார இறுதி விடுமுறை)
ஜூலை 19 - திங்கட்கிழமை - குரு ரிம்போசேவின் துங்கர் செச்சு. இந்த நாளில் கேங்டோக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
ஜூலை 20- செவ்வாய்க்கிழமை - பக்ரீத். இந்த பண்டிகையின் காரணமாக ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் வங்கிகள் இயங்காது.
ஜூலை 21 - புதன்கிழமை - ஈத்-உல்-ஆதா. இந்த நாள் பொது விடுமுறையாகும்.
ஜூலை 24 - 4 வது சனிக்கிழமை (வார இறுதி விடுமுறை)
ஜூலை 25 - ஞாயிறு (வார இறுதி விடுமுறை)
ஜூலை 31- சனிக்கிழமை - கெர் பூஜா. இந்த நாளில் அகர்தலா பகுதியில் வங்கிகள் செயல்படாது.

 

Tags :

Share via