தாம்பரம் - செங்கோட்டை இடையே வரும் 16ம் தேதி முதல் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்.

by Editor / 06-04-2023 11:14:57pm
தாம்பரம் - செங்கோட்டை இடையே வரும் 16ம் தேதி முதல் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்.

தாம்பரம் - செங்கோட்டை இடையே வரும் 16ம் தேதி முதல் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு...

ரயில் எண். 20683/20684, தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் இடையே விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி வழியாக வரும் 16ம் தேதி முதல் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் 8ம் தேதி அன்று தாம்பரம் - செங்கோட்டை புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்படுகிறது.

தாம்பரம் - செங்கோட்டை புதிய எக்ஸ்பிரஸ் ரயில் 29.05.2023ம் தேதி வரை வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது. 01.06.2023ம் தேதி முதல் வாரம் மூன்று முறை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பு:

திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, #கடையநல்லூர் ரயில் பயணிகள் கவனத்திற்கு,

ரயில் எண். 20683, தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் வருபவர்கள், விருதுநகருக்கு காலை 08.15 மணிக்கு வரும், ரயில் எண். 06503, மதுரை - செங்கோட்டை -பயணிகள் ரயிலில் ஏறி வரலாம்.

ரயில் எண். 20684, செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்பவர்கள், விருதுநகருக்கு மாலை 06.15 மணிக்கு செல்லும், ரயில் எண். 06504, செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயிலில் இறங்கி செல்லலாம்.

 

Tags :

Share via